தேனி

முகநூலில் அவதூறாக பதிவு: இளைஞரை கைது செய்யக்கோரி கம்பம் காவல் நிலையம் முற்றுகை

DIN

முத்துராமலிங்க தேவரை பற்றி அவதூறாக முகநூலில் பதிவிட்ட இளைஞரை கைது செய்யக்கோரி பார்வர்டு பிளாக் கட்சியினர் கம்பம் காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை இரவு முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு அகில இந்திய பார்வர்டு பிளாக், தென்னிந்திய பார்வர்டு பிளாக், சீர்மரபினர் நலச்சங்கத்தினர் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் 
திரண்டனர். 
பசும்பொன்முத்துராமலிங்கத் தேவரை பற்றி  இளைஞர் ஒருவர் அவதூறாக முக நூலில் வெள்ளிக்கிழமை பதிவு செய்ததை கொண்டு வந்து போலீஸாரிடம் காட்டி, அந்த இளைஞரை கைது செய்ய வலியுறுத்தினர். 
அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் சீமைச்சாமி, சம்மந்தப்பட்ட இளைஞரை போலீஸார் தேடி வருவதாக கூறினார். 
ஆனாலும் இளைஞரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கம்பம் பகுதியில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை: கவிதாவின் காவல் மே 14 வரை நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

வெயிலில் இறந்தவர்களுக்கு நிதியுதவி: கேரள அரசை வலியுறுத்தும் காங்கிரஸ்!

அரவிந்த் கேஜரிவால் இடைக்கால ஜாமீன் மனு ஒத்திவைப்பு

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

SCROLL FOR NEXT