தேனி

கம்பத்தில் மேற்கு வங்க ஆயுதப்படை போலீஸார் கொடி அணிவகுப்பு

DIN

மக்களவைத் தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக, தேனி மாவட்டம் கம்பத்துக்கு வந்துள்ள மேற்கு வங்க மாநில ஆயுதப் படை போலீஸார் செவ்வாய்க்கிழமை கொடி அணிவகுப்பு நடத்தினர். 
மக்களவைத் தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில், தேனி மாவட்டக் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் சுருளிராஜா தலைமையில், மேற்கு வங்க மாநில ஆயுதப் படைப் பிரிவின் 180 காவலர்கள் ஆயுதம் ஏந்தி கம்பம் வடக்கு காவல் நிலையத்திலிருந்து அரசு மருத்துவமனை வரை கொடி அணிவகுப்பு நடத்தினர். 
மேற்கு வங்க ஆயுதப்படை போலீஸார், ஆய்வாளர்கள் எம். முகர்ஜி, பிரதீப் பானர்ஜி ஆகியோர் தலைமையில், கம்பம் நாடார் மீட்டிங் ஹால் மற்றும் க.புதுப்பட்டி பேரூராட்சி மண்டபம் ஆகிய இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 ஆய்வாளர்கள், 17 சார்பு-ஆய்வாளர்கள், 3 சிறப்பு சார்பு-ஆய்வாளர்கள், 144 காவலர்கள், 14 உதவியாளர்கள் என மொத்தம் 180 பேர் உள்ளனர்.
கொடி அணிவகுப்புக்கான ஏற்பாடுகளை, உத்தமபாளையம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அ. வீரபாண்டி, ஆய்வாளர்கள் பொன்னிவளவன், சுப்புலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல் நேரலை: இரு கூட்டணி கட்சிகள் ஆலோசனை!

கருத்துக் கணிப்புகளைவிட பாஜக கூட்டணி கட்சிகள் அதிகளவில் வெற்றி பெறும்: தமிழிசை சௌந்தரராஜன்

இது மோடியின் தார்மீக தோல்வி: கார்கே

வாக்கு எண்ணிக்கை நாளில் நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு!

பாலியல் வழக்கில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி

SCROLL FOR NEXT