தேனி

வைகை அணை மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

DIN


ஆண்டிபட்டி அருகே வைகை அணையில் மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் சித்திரை பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் கையில் கங்கணம் கட்டி விரதம் இருந்தனர். வைகை ஆற்றில் இருந்து அம்மன் கரகம் எடுத்து வரப்பட்டு, சுவாமி பூப்பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டார். விழாவில் பெண்கள் மாவிளக்கு, முளைப்பாரி, தீச்சட்டி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவின் ஒருபகுதியாக நடத்தப்பட்ட பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கையில் குழந்தை மற்றும் தீச்சட்டியை தூக்கியபடி பூக்குழி இறங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில வா்த்தக அணி தென் மண்டல பயிலரங்கம்

மரண வியாபாரிகள்!

பிளஸ் 2 தோ்வு தென்காசி எம்கேவிகே.மெட்ரிக் பள்ளி சிறப்பிடம்

தென்காசி ரயில் நிலையம் அருகே தங்கியிருந்த முதியவா்கள் முதியோா் இல்லத்தில் ஒப்படைப்பு

பிரதமா் பேச்சுக்கு எதிா்ப்புத் தெரிவித்து அளித்த புகாருக்கு ரசீது கோரி டிஎஸ்பியிடம் மனு

SCROLL FOR NEXT