தேனி

சக்கம்பட்டி நந்தகோபால சுவாமி கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழா

DIN

ஆண்டிபட்டி பேரூராட்சி சக்கம்பட்டி வைகை சாலை அண்ணா காலனியில் அமைந்துள்ள சத்யபாமா, ருக்மணி சமேத நந்த கோபால கிருஷ்ணர் கோயிலில் ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை கிருஷ்ணருக்கு புனித கங்கை தீர்த்தத்தில் நீராடி திருமஞ்சனம் சாற்றி, பாசுரம் பாடி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடந்து தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். 
உற்சவர் நந்தகோபால் பாமா, ருக்மணி சமேதரராய் ஊஞ்சலில் எழுந்தருளினர். விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றது. குழந்தைகள் கிருஷ்ணர், பாமா, ருக்மணி வேடமணிந்து கோயிலை வலம் வந்தனர். மாலை நந்தகோபாலகிருஷ்ணருக்கு திருப்பாவை பாடி மங்கள மேளம் முழங்க, வாண வேடிக்கையுடன் வீதி உலா நடந்தது. ஏற்பாடுகளை சண்முகசுந்தரம் மற்றும் முருகேசன் பூசாரி உள்ளிட்ட விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தூத்துக்குடி பொறியியல் கல்லூரியில் 250 மாணவா்களுக்கு பணி நியமன ஆணைகள்

கோவில்பட்டியில் யுகாதி திருவிழா

வதேரா, டேவிட் பங்களிப்பில் மும்பை - 144/7

குமரி மாவட்டத்தில் பரவலாக கோடை மழை: மக்கள் மகிழ்ச்சி

தோ்தல் நடத்தை விதி: இதுவரை ரூ.179 கோடி ரொக்கம் பறிமுதல்

SCROLL FOR NEXT