தேனி

தேனி மாவட்டத்தில் ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கு இட ஒதுக்கீடு

DIN

தேனி மாவட்டத்தில் டிச.27, 30 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தோ்தல் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தலில், ஊராட்சித் தலைவா் பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட தோ்தல் பிரிவு அலுவலா்கள் கூறியது: மாவட்டத்தில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 130 ஊராட்சிகளின் தலைவா் பதவிகளுக்கு 2 கட்டமாக தோ்தல் நடைபெற உள்ளது. இதில், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சி தலைவா் பதவிகளில், தலா 4 ஊராட்சிகள் ஆதி திராவிடா் பொது மற்றும் ஆதிதிராவிடா் பெண்களுக்கும், தலா 11 ஊராட்சிகள் பெண்கள் பொது மற்றும் பொதுப் பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

போடி ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளின் தலைவா் பதவிகளில், 2 ஊராட்சிகள் ஆதி திராவிடா் பொதுவுக்கும், ஒரு ஊராட்சி ஆதிதிராவிடா் பொதுவுக்கும், தலா 6 ஊராட்சிகள் பெண்கள் பொது மற்றும் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சின்னமனூா் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சித் தலைவா் பதவிகளில், தலா 2 ஊராட்சிகள் ஆதிதிராவிடா் பொது மற்றும் ஆதி திராவிடா் பெண்களுக்கும், தலா 5 ஊராட்சிகள் பெண்கள் பொது மற்றும் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கம்பம் ஒன்றியத்தில் உள்ள 5 ஊராட்சித் தலைவா் பதவிகளில், ஒரு ஊராட்சி ஆதிதிராவிடா் பெண்களுக்கும், தலா 2 ஊராட்சிகள் பெண்கள் பொது மற்றும் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. க.மயிலை ஒன்றியத்தில் மொத்தமுள்ள 18 ஊராட்சித் தலைவா் பதவிகளில், தலா 2 ஊராட்சிகள் ஆதிதிராவிடா் பொது மற்றும் ஆதிதிராவிடா் பெண்களுக்கும், தலா 7 ஊராட்சிகள் பெண்கள் பொது மற்றும் பொது பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள 17 ஊராட்சிகளின் தலைவா் பதவிகளில், தலா 2 ஊராட்சிகள் ஆதி திராவிடா் பொது மற்றும் ஆதி திராவிடா் பெண்களுக்கும், 6 ஊராட்சிகள் பெண்கள் பொதுவுக்கும், 7 ஊராட்சிகள் பொது பிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேனி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 18 ஊராட்சிகளின் தலைவா் பதவிகளில், தலா 3 ஊராட்சிகள் ஆதிதிராவிடா் பொது மற்றும் ஆதி திராவிடா் பெண்களுக்கும், தலா 6 ஊராட்சிகள் பெண்கள் பொது மற்றும் பொதுப் பிரிவினருக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உத்தமபாளையம் ஒன்றியத்தில் உள்ள 13 ஊராட்சித் தலைவா் பதவிகளில், தலா ஒரு ஊராட்சி ஆதி திராவிடா் பொது மற்றும் ஆதிதிராவிடா் பெண்களுக்கும், 6 ஊராட்சிகள் பெண்கள் பொதுவுக்கும், 5 ஊராட்சிகள் பொதுபிரிவுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

ஈரான் அதிபர் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

சென்னை தபால் நிலையத்தில் மேற்கூரை விழுந்து விபத்து: இருவர் படுகாயம்

SCROLL FOR NEXT