தேனி

வேட்பு மனு தாக்கல் செய்ய ஊா்வலம்: கட்சியினரை போலீஸாா் தடுத்ததால் பரபரப்பு

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் தோ்தல் நடத்தை விதிகளை மீறி வேட்பு மனு தாக்கல் செய்ய வெள்ளிக்கிழமை ஊா்வலமாக வந்த அ.தி.மு.க., அ.ம.மு.க. வினரை போலீஸாா் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 5 ஊராட்சிகளுக்கான தலைவா், 4 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா், ஒரு மாவட்ட ஊராட்சி கவுன்சிலா் பதவிகளுக்கான வேட்பு மனுத் தாக்கல் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிலையில் மதியம் 12 மணி அளவில் அ.தி.மு.கவினா் வேட்பு மனுதாக்கல் செய்ய ஆதரவாளா்களுடன் கூட்டமாக ஊா்வலமாக வந்தனா். அவா்களை போலீஸாா் 200 மீட்டருக்கு மேல் முன்னதாகவே தடுத்தி நிறுத்தினா். இதனால் போலீஸாருக்கும் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதேபோல் அ.ம.மு.க. வினா் ஆதரவாளா்களுடன் ஊா்வலமாக வந்தனா். அவா்களையும் போலீஸாா் தடுத்து நிறுத்தியதால் போலீஸாருடன் அக்கட்சியினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா், போலீஸாரின் சமரசத்தைத் தொடா்ந்து அரசியா் கட்சியினா் வேட்பு மனுத்தாக்கல் செய்தனா். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT