தேனி

ஆண்டிபட்டியில் கடையில் செல்லிடப்பேசி திருடிய இளைஞர் போலீஸில் ஒப்படைப்பு

ஆண்டிபட்டியில் வியாழக்கிழமை செல்லிடப்பேசிக் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து செல்லிடப்பேசியை

DIN

ஆண்டிபட்டியில் வியாழக்கிழமை செல்லிடப்பேசிக் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து செல்லிடப்பேசியை திருடிச் சென்ற இளைஞரை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அரசு மருத்துவமனையின் பின்புறம் ஆறுமுகம் என்பவர் செல்லிடப்பேசி கடை வைத்துள்ளார். வியாழக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் இவரது கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் செல்லிடப்பேசி வாங்குவது போல் நடித்து யாரும் எதிர்பார்க்காத வேளையில் ரூ. 8000 மதிப்புள்ள செல்லிடப்பேசியை எடுத்துக் கொண்டு ஆண்டிபட்டி- தேனி தேசிய நெடுஞ்சாலையில் ஓடினார். இதையடுத்து கடைக்காரர் கூச்சலிடவே அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் அந்த இளைஞரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், ஆண்டிபட்டி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த ஹரீஸ் என்பது தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT