தேனி

தேனியில் களைகட்டிய சந்தை

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திங்கள்கிழமை தேனி சந்தையில் கரும்பு, மஞ்சள், வெல்லம் மற்றும் பூக்கள் விற்பனை களைகட்டியது.
சின்னமனூர் மற்றும் தேவதானப்பட்டி பகுதியிலிருந்து தேனி சந்தைக்கு கரும்புக் கட்டுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், சின்னமனூரிலிருந்து வந்த கரும்புகள் உயரம் மற்றும் தடிமனாக இருந்ததால், 10 கரும்புகள் கொண்ட கட்டு ஒன்று ரூ.300 முதல் ரூ.400 வரையும், தேவதானப்பட்டியிலிருந்து வந்த கரும்புக் கட்டு ஒன்று ரூ.250 முதல் ரூ.300 வரையும் விற்பனையானது. கரும்பு ஒன்று ரூ.50 முதல் ரூ.70 வரை விற்கப்பட்டது. மதுரை மற்றும் மேலூர் பகுதியிலிருந்தும் சந்தைக்கு கரும்புகள் வந்தன. கடந்த ஆண்டை விட இந்தாண்டு வெல்லம் அதிகமாக கிலோ ரூ.45-க்கும், 30 கிலோ எடையுள்ள மூட்டை ஒன்று ரூ.1,260 முதல் ரூ.1,300 வரையும் விற்பனையானது.
பெரியகுளம், திண்டுக்கல், ஈரோடு, சாலைப்புதூர் ஆகிய பகுதிகளிலிருந்து சந்தைக்கு மஞ்சள் கிழங்கு வரத்து இருந்தது. இந்த ஆண்டு மஞ்சள் கிழங்கு போதிய விளைச்சல் இல்லாததால்,  கடந்த ஆண்டை விட அதிகமாக கிலோ ரூ.25-க்கு விற்பனையானது.  பூக்கள் விலை மும்மடங்கு உயர்ந்து மல்லிகைப் பூ கிலோ ரூ. 2,100-க்கும், கனகாம்பரம் கிலோ ரூ.1,000-க்கும், கலர் பிச்சி கிலோ ரூ.1,200-க்கும், வெள்ளைப்பிச்சி கிலோ ரூ.1,500-க்கும் விற்பனையானது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

SCROLL FOR NEXT