தேனி

தேனியில் இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்து இளைஞர் சாவு

DIN

தேனியில் செவ்வாய்க்கிழமை பெரியகுளம் புறவழிச்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்ற கார் ஓட்டுநர் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்தார்.
தேனி மாவட்டம் பெரியகுளம் கீழவடகரையைச் சேர்ந்தவர் தங்கராஜ் மகன் செல்வராஜ் (40). கார் ஓட்டுநர். செவ்வாய்க்கிழமை இரவு, நண்பர் ஒருவருக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் தேனி பெரியகுளம் புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி இருசக்கர வாகனத்துடன் சாலையில் கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள் செல்வராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்தவரின் மனைவி முருகத்தாய் தேனி காவல் நிலையத்தில் புகார் செய்ததின் பேரில், போலீஸார் விசாரணை நடத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT