தேனி

தேனி அருகே பைக் விபத்தில் பெண் பலி

DIN

தேனி அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த பெண் செவ்வாய்கிழமை இரவு உயிரிழந்தார். 
உத்தமபாளையம், கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜமால் முகைதீன் மகன் முகமது ரபீக் ராஜா(34). இவர் தனது மனைவி ரெஜினாபேகம்(30) மற்றும் கைக்குழந்தையுடன் உத்தமபாளையத்தில் இருந்து தேனி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, கோட்டூர் அருகே தேனி-கம்பம் நெடுஞ்சாலையில் உள்ள வேகத் தடையில் இருசக்கர வாகனம் வேகமாக ஏறி இறங்கியது. இதில், ரெஜினாபேகம் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதில் அவர் தலையில் பலத்த காயமடைந்தார். 
ஆபத்தான நிலையில் சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.  இது குறித்து வீரபாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT