தேனி

கிணறுகளை மூடாமல் 4 வழிச்சாலையை மாற்றுப்பாதையில் அமைக்கக் கோரிக்கை

தேனி மாவட்டம்  கம்பம் புறவழிச்சாலை அமையும் இடத்தில் உள்ள விவசாய கிணறுகளை மூடாமல் பணிகளை தொடங்க வேண்டும்

DIN

தேனி மாவட்டம்  கம்பம் புறவழிச்சாலை அமையும் இடத்தில் உள்ள விவசாய கிணறுகளை மூடாமல் பணிகளை தொடங்க வேண்டும் என விவசாயிகள் தேனி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் நான்குவழிச்சாலை திட்டம் கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து, நடைபெற்று வருகிறது. தற்போது கம்பம் க.புதுப்பட்டியிலிருந்து, கூடலூர் வரையிலான  புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 
நான்கு வழிச் சாலை அமையும் பாதைகளில் பெரும்பாலான,  இடங்களில் விவசாயக் கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளின் மூலம் தான் கடந்த பல ஆண்டுகளாக தோட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. 
அதனால் நான்கு வழிச் சாலை அமைக்கும் போது விவசாய கிணறுகளை மூடாமல், மாற்றுப் பாதையில் திட்டத்தை செயல்படுத்த  தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

மேஷ ராசிக்கு உதவி கிடைக்கும்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT