தேனி

தேசிய "ஸ்கேட்டிங்' போட்டி: உத்தமபாளையம் கல்லூரி மாணவர் 2 தங்கப் பதக்கம் வென்று சாதனை

DIN

தேசிய அளவில் நடைபெற்ற "ஸ்கேட்டிங்' விளையாட்டு போட்டியில் 2 தங்கப் பதக்கங்கள் வெற்று சாதனை படைத்த உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் ஹவுதியா கல்லூரி மாணவருக்கு புதன் கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் தேசிய அளவிலான "ஸ்கேட்டிங்' விளையாட்டு போட்டி ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில்  பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் கலந்துகொண்டனர். 
அதில், தமிழ்நாட்டிலிருந்து இக் கல்லூரி முதலாமாண்டு இளங்கலை வணிகவியல் துறை மாணவர் ஜெய பாலாஜி கலந்துகொண்டார். 
இவர், 16 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் 800 மீட்டர் மற்றும் 1,200 மீட்டர் போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடத்தை பிடித்து 2 தங்கப் பதக்கங்கள் வென்றார். இதையடுத்து சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளவும் இவர் தகுதி பெற்றார்.
இதைத் தொடர்ந்து கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற  பாராட்டு விழாவில் மாணவர் ஜெயபாலாஜியை கல்லூரி தாளாளர் மற்றும் செயலாருமான எம்.தர்வேஷ் முகைதீன், கல்லூரி முதல்வர் முகமது மீரான், கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது மீரான், உடற்கல்வி இயக்குநர் அக்பர் அலி, கண்காணிப்பாளர் அபுதாகீர்  மற்றும் கல்லூரி நிர்வாகிகள் பாராட்டினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெம்போவில் ராகுல்!

டெம்போவில் ராகுல் காந்தி!

அழகிய தமிழ்மகள்! ஸ்ரேயா..

முதுமலையில் யானைகள் கணக்கெடுப்பு தொடங்கியது

உதகை மலை ரயில் இன்று ரத்து!

SCROLL FOR NEXT