தேனி

பெரியகுளம் தீர்த்த தொட்டியை பராமரிக்க இளைஞர்கள் கோரிக்கை

DIN

பெரியகுளம் தீர்த்த தொட்டியை சீரமைத்து பராமரிக்க  வேண்டும் என, இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியகுளம் பகுதி இளைஞர்கள் நீச்சல் கற்றுக் கொள்வதற்காக, சோத்துப்பாறை சாலையில் 200 ஆண்டுகளுக்கு முன்பு தீர்த்த தொட்டியை முன்னோர்கள் கட்டினர். இத் தொட்டியின் ஒரு துவாரத்தின் வழியாக உள்ளே வரும் தண்ணீர், மற்றொரு துவாரத்தின் வழியாக வெளியேறி விடும். இதில்,  பெரியகுளம் பகுதியில் உள்ள ஏராளமானோர் நீச்சல் பயிற்சி பெற்று வந்தனர்.
நாளடைவில் இந்த தொட்டி உரிய பராமரிப்பின்றி, குப்பைகள் அடைத்தும் மற்றும் பாசிகள் படர்ந்தும் அசுத்தமடைந்துள்ளன. இதனால்,  இளைஞர்கள் நீச்சல் பயிற்சி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
எனவே, தீர்த்த தொட்டியை சீரமைத்து முறையாகப் பராமரிக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அரசுப் பள்ளிகளில் அக்கறை காட்டுவோம்

SCROLL FOR NEXT