தேனி

தேசிய கூடைப்பந்து நாக் அவுட்  போட்டி: 8 அணிகள் மோதல்

DIN

பெரியகுளத்தில் நடைபெறும் அகில இந்திய  கூடைப்பந்து நாக் அவுட் போட்டியில் வியாழக்கிழமை 8 அணிகள் மோதின. 
பெரியகுளம் சில்வர் ஜூப்ளி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 60 ஆவது அகில இந்திய கூடைப்பந்தாட்ட போட்டிகள் மே 15 முதல் நடைபெற்று வருகின்றன.  முதல் நாள் நடைபெற்ற போட்டியில் வடுகபட்டி அணியை திண்டுக்கல் கூடைப்பந்தாட்ட கழக அணி வெற்றிபெற்றது.  
வியாழக்கிழமை நடைபெற்ற போட்டியில் செங்கோட்டை, ரெட் போர்ட் அணியை தெற்கு ரயில்வே அணி 30- 61 என்ற புள்ளி கணக்கிலும், அதே போல் தெலங்கானா ஓய்.எம்.சி. அணியை திண்டுக்கல் கூடைப்பந்தாட்ட கழக அணி 68 -65 என்ற புள்ளி கணக்கிலும் வெற்றி பெற்றன. 
சென்னை, விளையாட்டு விடுதி அணி, கரூர் டெக்ஸ்டைல் அணியை 98-48 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. செகந்திராபாத் ஏ.ஓ.சி அணி , சேலம் திருவேணி கூடைப்பந்தாட்ட கழக அணியை  102-58 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. வரும் 19 ஆம் தேதி மாலையில் இருந்து லீக் சுற்றி போட்டிகள் தொடங்குகின்றன. வரும் 21 ஆம் தேதி இறுதி போட்டி நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT