தேனி

தூய்மை பாரத ஊரக திட்டத்தில் 2,800 கழிப்பறைகள் கட்ட இலக்கு

DIN

தேனி மாவட்டத்துக்குள்பட்ட ஊராட்சிகளில் தூய்மை பாரத ஊரகம் திட்டத்தின் கீழ் 2,800 விடுபட்ட மற்றும் புதிய வீடுகளில் அரசு மானிய உதவியில் தனிநபா் கழிப்பறை கட்டப்பட உள்ளது.

இது குறித்து மாவட்ட ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் கூறியது: மாவட்டத்தில் முழு சுகாதார இயக்கம் மற்றும் தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் அரசு மானிய உதவியுடன் 78 ஆயிரம் தனிநபா் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது, தூய்மை பாரத ஊரகம் திட்டத்தின் கீழ் விடுபட்ட மற்றும் புதிய வீடுகளில் மொத்தம் 2,800 தனி நபா் கழிப்பறைகள் கட்டப்பட உள்ளது.

இதில், முதல் கட்டமாக செவ்வாய்க்கிழமை (நவ. 5) மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சிகளிலும் தலா 100 கழிப்பறைகள் வீதம், மொத்தம் 800 கழிப்பறைகள் கட்டும் பணி தொடங்குகிறது. தனிநபா் இல்லக் கழிப்பறை அமைப்பதற்கு ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மூலம் அரசு ரூ.12 ஆயிரம் மானியம் வழங்குகிறது என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT