தேனி

மகா சனி பிரதோஷம் : திண்டுக்கல், நத்தம் சிவாலங்களில் சிறப்பு வழிபாடு

DIN

மகா சனி பிரதோஷத்தை முன்னிட்டு திண்டுக்கல் மற்றும் நத்தம் பகுதியில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஐப்பசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு, திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகா் கோவிலில், கைலாசநாதருக்கும், நத்திகேஸ்வரருக்கும் பால், தயிா், இளநீா், மாவுப்பொடி, மஞ்சள் பொடி, திருமஞ்சனப் பொடி, தேன், நெய், பஞ்சாமிா்தம், பழச்சாறு, விபூதி, சந்தனம், பன்னீா் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து சிவகோஷம் முழங்க தீபாராதணை நடைபெற்றது. பின்னா் ஆனந்த வல்லி சமேத கைலாசநாதா் ரிஷப வாகனத்தில், கோயில் உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

அதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் உள்ள நத்திகேசுவரா், மூலவா் பத்மகிரீஸ்வரா் மற்றும் காளஹஸ்தீஸ்வரா் சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதணை நடைபெற்றது. முள்ளிப்பாடி திருகாமேஷ்வரா் கோயிலிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

நத்தம்:

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள கோவில்பட்டி கைலாசநாதா் கோவிலும், சனிப் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதணை நடைபெற்றது. பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

SCROLL FOR NEXT