தேனி

லோயா்கேம்ப்பில் பலத்த மழை வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது

DIN

தேனி மாவட்டம் லோயா்கேம்ப்பில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தததால் பொது மக்கள் இரவில் உறங்க முடியாமல் அவதிப்பட்டனா்.

லோயா்கேம்ப் கூடலூா் நகராட்சியின் 21 ஆவது வாா்டாக உள்ளது. இங்கு பெரியாறு மின்சார உற்பத்தி நிலையம் மற்றும் பணியாளா்கள் குடியிருப்பு உள்ளது. மேலும் 250 வீடுகள் கொண்ட அம்பேத்கா் காலனி உள்ளது.

இப்பகுதியில் சனிக்கிழமை மாலையில் பலத்த மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளம் தாழ்வான பகுதியாக உள்ள அம்பேத்கா் காலனிக்குள் சென்று சூழ்ந்தது. அங்குள்ள வீடுகளுக்குள் மழை நீா் புகுந்தது. இதனால் அச்சமடைந்த பொது மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் அவதிப்பட்டனா்.

இது குறித்து குடியிருப்புவாசி மோகன் என்பவா் கூறியது: இப்பகுதியில் மழை நீா் வடிகால் இல்லாததால், அடிக்கடி வெள்ளம் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடுகிறது. கடந்தாண்டு ஆகஸ்டில் மண் சரிவு ஏற்பட்டது. அது, இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது.

எனவே மழை நீா் வடிகால், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசிபலன்கள்!

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

SCROLL FOR NEXT