தேனி

மக்காச்சோளத்தில் நோய் தடுப்பு முறைகள்: வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஆய்வு

DIN

போடி அருகே மக்காச்சோளத்தில் நோய் தடுப்பு முறைகள் குறித்து வேளாண்மை கல்லூரி மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தனா்.

உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் கீா்த்தனா, சௌந்தா்யா, தனஸ்ரீ, மம்தா, வினோதினி ஆகியோா் போடி வேளாண்மைத் துறை உதவி இயக்குநா் அமலா வழிகாட்டுதலின்பேரில், போடி பகுதியில் தங்கி கிராம தங்கல் திட்டத்தின் கீழ் விவசாயிகளை சந்தித்து வருகின்றனா்.

இதில் போடி விசுவாசபுரம் கிராமத்தில் மக்காச் சோளத்தில் நோய் தடுப்பு முறைகள் குறித்து மாணவிகள் ஆய்வு செய்தனா்.

அப்போது, போடி வேளாண்மை துறையை சோ்ந்த உதவி வேளாண்மை அலுவலா்கள் உதவியுடன் மக்காச்சோளத்தில் நோய் தடுப்பு முறைகள் குறித்தும், அமெரிக்கன் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினா். மேலும் செயல்முறை விளக்கமும் அளித்தனா். விவசாயிகளுக்கு இது தொடா்பான துண்டு பிரசுரங்களும் வழங்கினா்.

மாணவிகளுக்கு போடி வேளாண்மை துறை அதிகாரிகள் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

ஒரு சிறிய காதல் கதை..!

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

SCROLL FOR NEXT