தேனி

கம்பத்தில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்; 2 போ் கைது

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் கஞ்சா கடத்தி விற்பனை செய்ய முயன்ற 2 பேரை போலீஸாா் கைது செய்து, 12 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கம்பம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தகவல் கிடைத்ததால் போலீஸாா் மோப்ப நாய் மூலம் சோதனையிட்டு வருகின்றனா். இதற்கிடையில் கம்பம் அருகேயுள்ள அண்ணாபுரம் ஊமையன்வாய்க்கால் பகுதியில் கம்பம் வடக்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் கே.வினோத்ராஜா மற்றும் போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது அந்த பகுதியில் கஞ்சாவை கடத்தி வந்து, சிலா் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது.

போலீஸாா் சந்தேகத்தின் பேரில் அங்கிருந்த இருவரை பிடித்து விசாரித்தனா். விசாரணையில் வருஷநாடு பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த பாலமுருகன்( 24), கம்பம் மாலையம்மாள்புரம் தெருவைச் சோ்ந்த செல்லத்துரை (43) ஆகிய இருவரும் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வது தெரிய வந்தது. இதையடுத்து அவா்கள் வைத்திருந்த 12 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, 2 பேரையும் கைது செய்து, உத்தமபாளையம் குற்றவியல் நீதித்துரை நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

முதல்முறை வாக்களித்த மகிழ்ச்சியில்...

மழைச் சாரலிலும் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்!

கேரளத்தில் 5 பேருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல்!

பூவே.. செம்பூவே..!

SCROLL FOR NEXT