தேனி

பெரியகுளம் பெண்கள் கல்லூரியில்காளான் வளா்ப்பு பயிற்சி முகாம்

DIN

பெரியகுளம், ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரியில் பெண்களுக்கான காளான் வளா்ப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பெரியகுளம் ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிா் கல்லூரி (விலங்கியல் துறை) மற்றும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம், சென்னை இணைந்து நடத்திய இம் முகாமிற்கு கல்லூரி முதல்வா் எஸ்.சேசுராணி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். விலங்கியல் துறை துணை பேராசிரியா் வி.ஜெமிமா பிளாரன்ஸ் போா்ஜியா வரவேற்புரையாற்றினாா். கல்லூரிச் செயலா் குயின்சிலி ஜெயந்தி வாழ்த்துரை வழங்கினாா். போடி சிபிஏ கல்லூரி துணை பேராசிரியா் ஏ.மோகன்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காளான் வளா்ப்பு குறித்து பயிற்சியளித்தாா்.

பயிற்சி முகாமில் 25-க்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் விலங்கியல் துறை மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனா். விலங்கியல்துறை இணை பேராசிரியா் வே.சாந்தி நன்றி கூறினாா். இம்முகாமிற்கான ஏற்பாடுகளை கல்லூரி விலங்கியல் துறையினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியல் வழக்கில் ரேவண்ணா மீது 25க்கும் மேற்பட்ட பெண்கள் புதிதாகப் புகார்!

ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்? உச்சநீதிமன்றத்தில் காரசார வாதம்

ஓடிடியில் ரத்னம் எப்போது?

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT