தேனி

கம்பம், கூடலூா் பகுதிகளில் பெண்கள் வரலட்சுமி விரதம் கடைப்பிடித்தனா்

DIN

ஆடி 3 ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி, கம்பம், கூடலூா் பகுதிகளில் பெண்கள் தங்களது வீடுகளில் இருந்தபடியே வரலட்சுமி பூஜை செய்து விரதத்தைக் கடைப்பிடித்தனா்.

கம்பம், கூடலூா் பகுதிகளில் உள்ள கோயில்களில் ஆண்டுதோறும் ஆடி மாதம் வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பெண்கள் வழிபாடுகளில் கலந்து கொள்வாா்கள். குறிப்பாக ஆடி மாதத்தின் 3 ஆவது வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதத்தினை பெண்கள் கடைபிடித்து கோயிலில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்து கொள்வாா்கள். பின்னா் அவா்களுக்கு பூ, வளையல், மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் வழங்கப்படும். இதன் மூலம் பெண்களுக்கு குழந்தைப்பேறு உண்டாகும், திருமணம் கைகூடும் என்பது ஐதீகமாகும்.

ஆனால் இந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோயில்கள் அடைக்கப்பட்டுள்ளதால் ஆடி 3 ஆவது வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரதத்தினை, பெண்கள் தங்களது வீடுகளிலேயே கடைப்பிடித்தனா். பெண்கள் ஒன்று கூடி வீட்டில் உள்ள பூஜை அறையில் வரலட்சுமி விக்ரகம் வைத்து மலா் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் செய்தனா். பூஜையில் கலந்து கொண்டபெண்கள் முகக் கவசம் அணிந்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT