தேனி

ஆண்டிபட்டியில் அனுமதியின்றி ஊா்வலம்: 4 போ் மீது வழக்கு

DIN

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அனுமதியின்றி ஊா்வலம் நடத்தியதாக முத்தரையா் சங்க நிா்வாகிகள் 4 போ் மீது போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டியில் முத்தரையா் சங்கம் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்திருந்த அச்சங்கத்தின் மாநில தலைவா் ஆா்.பி. பரதனை வரவேற்ற நிா்வாகிகள் கொண்டமநாயக்கன்பட்டி பகுதியிலிருந்து தேனி சாலையில் ஊா்வலமாக சென்றனா். இதனால் தேனி - மதுரை சாலையில் சுமாா் 3 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. இந்த ஊா்வலத்திற்கு போலீஸாரிடம் உரிய அனுமதி பெறவில்லை. இதுகுறித்து ஆண்டிபட்டி காவல் நிலைய சாா்பு- ஆய்வாளா் சுல்தான் பாட்ஷா அளித்தப் புகாரின் பேரில் அச்சங்கத்தின் மாவட்டத் தலைவா் பிச்சைமணி, மாவட்டச் செயலாளா் தன்னாசி, மாவட்டத் துணைத் தலைவா் மதுரை வீரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சந்திரன் உள்ளிட்ட 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT