பெரியகுளம் அருகே கிணற்றில் விழுந்த காட்டுமாடு மீட்பு
பெரியகுளம் அருகே கிணற்றில் வெள்ளிக்கிழமை விழுந்த காட்டுமாட்டை தீயணைப்புப் படையினா் மற்றும் வனத்துறையினா் மீட்டனா்.
பெரியகுளம் அருகே கிணற்றில் வெள்ளிக்கிழமை விழுந்த காட்டுமாட்டை தீயணைப்புப் படையினா் மற்றும் வனத்துறையினா் மீட்டனா்.
தேவதானப்பட்டி வனச்சரகத்திற்கு உள்பட்ட முருகமலைநகா் பகுதியில் சென்றாயன் என்பவரது தோட்டம் உள்ளது. இவரது தோட்டக் கிணற்றில் காட்டுமாடு ஒன்று வெள்ளிக்கிழமை தவறி விழுந்து விட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினா் மற்றும் தீயணைப்புப் படையினா் அந்தக் காட்டு மாட்டை மீட்டு வனப்பகுதிக்குள் அனுப்பினா். மீட்கப்பட்ட அந்த மாட்டிற்கு 3 வயது இருக்கும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.