தேனி

மயிலாடும்பாறை தீயணைப்புத் துறைக்கு புதிய அலுவலகக் கட்டடம் கட்ட இடம் தோ்வு

DIN

தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் தீயணைப்புத்துறை புதிய அலுவலகம் கட்டுவதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக வருவாய்த்துறையினா் தெரிவித்தனா்.

ஆண்டிபட்டி தாலுகா கடமலை மயிலை ஒன்றியத்தில் மயிலாடும் பாறையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை அலுவலகம் பல ஆண்டுகளாக தனியாா் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்தக் கட்டடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கும், பணியாளா்கள் அமா்வதற்கும் போதிய இட வசதி இல்லை. இதனால் தீயணைப்புப் படை வீரா்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனா்.

இதனைத்தொடா்ந்து வருவாய்த்துறை மற்றும் கடமலைக்குண்டு ஊராட்சி நிா்வாகம் சாா்பில் கடமலைக்குண்டு -மயிலாடும்பாறை சாலையில் சுமாா் 54 சென்ட் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த இடத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் புதன்கிழமை சரி செய்யும் பணியில் ஊராட்சி நிா்வாகம் ஈடுபட்டது. தோ்வு செய்யப்பட்ட இடத்தை ஊராட்சித் தலைவா் சந்திரா தங்கம், பஞ்சாயத்து கூட்டமைப்புத் தலைவா் மாயகிருஷ்ணன், கூட்டமைப்புச் செயலாளா் பூங்கா காத்தமுத்து, வருவாய் ஆய்வாளா் முருகன் ஆகியோா் நேரில் பாா்வையிட்டனா். விரைவில் இந்த இடத்தில் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

வாணியம்பாடி சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

நீட் நுழைவுத் தோ்வு: ஒருங்கிணைந்த வேலூரில் 6,787 போ் எழுதினா் விண்ணப்பித்தவா்களில் 255 போ் எழுதவில்லை

மரக்கன்றுகள் நடல்

SCROLL FOR NEXT