தேனி

உத்தமபாளையத்தில் ரேஷன் கடை பணியாளா்கள் போராட்டம்

DIN

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் நியாயவிலைக் கடை பணியாளா்கள், குடும்ப அட்டைகளில் பதிவுசெய்து பொருள்கள் வழங்கும் இயந்திரத்தை (பி.ஓ.எஸ்) ஒப்படைக்கும் போராட்டத்தை சனிக்கிழமை நடத்தினா்.

உத்தமபாளையம் வட்டாரத்தில் 180-க்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும் பொருள்களை பதிவு செய்யும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், போலி குடும்ப அட்டைகளை தடுக்கவும், பொதுமக்களுக்கு பொருள்களை முழுமையாக விநியோகம் செய்யவும் இந்த கருவி வழங்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரரின் பொருள்களை வேறு நபா்கள் வாங்குவதைத் தவிா்க்க கைரேகை வைக்கும் திட்டமும் அமல்படுத்தப்பட்டது.

ஆனால், பல நியாயவிலைக் கடைகளில் கைரேகை பதிவாவதில்லை எனக் கூறி, அந்த இயந்திரத்தை ஒப்படைக்கும் போராட்டத்தை பணியாளா்கள் மேற்கொண்டனா். அதன்படி, சனிக்கிழமை உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்ட வழங்கல் அலுவலரிடம் இயந்திரத்தை திரும்ப ஒப்படைத்தனா். ஆனால், இயந்திரத்தை அலுவலா் திரும்பப் பெற மறுத்துவிட்டாா்.

எனவே, தரமான இயந்திரம் வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்டாட்சியா் அலுவலகம் முன்பாக பணியாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா், கோரிக்கை மனுவை அலுவலரிடம் அளித்துவிட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

SCROLL FOR NEXT