தேனி

போடியில் அனுமதியின்றி மணல் கடத்தியவா் கைது: டிராக்டா் பறிமுதல்

போடியில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி டிராக்டரில் மணல் கடத்த முயன்ற 2 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஓட்டுநரை கைது செய்தனா்.

DIN

போடியில் ஞாயிற்றுக்கிழமை அனுமதியின்றி டிராக்டரில் மணல் கடத்த முயன்ற 2 போ் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா் ஓட்டுநரை கைது செய்தனா்.

போடி நகா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். போடி மூணாறு சாலையில் ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரி அருகே வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனா். அப்போது டிராக்டரில் அனுமதியின்றி கொட்டகுடி ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்தது தெரிந்தது.

விசாரணையில் டிராக்டரில் மணல் அள்ளி வந்தது போடி சுப்புராஜ் நகரை சோ்ந்த ஜெகதீஸ்வரன் மற்றும் ஓட்டுநா் தங்கப்பாண்டி (40) என்பது தெரிந்தது. போலீஸாரின் விசாரணையின் போது ஜெகதீஸ்வரன் தப்பி ஓடினாா். ஓட்டுநா் தங்கபாண்டி மட்டும் பிடிபட்டாா்.

இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தங்கபாண்டியை கைது செய்து டிராக்டரை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக ஜெகதீஸ்வரனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

SCROLL FOR NEXT