தேனி

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்பு: போடியில் முஸ்லிம்கள் ஊா்வலம்

DIN

தேனி மாவட்டம் போடியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை ஊா்வலம் நடத்தினா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்தும், சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் முஸ்லிம்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இந்த வாரம் வெள்ளிக்கிழமை பிற்பகலில் தொழுகை முடிந்தவுடன் போடி கட்டபொம்மன் சிலையிலிருந்து தேவா் சிலை வரை ஊா்வலமாகச் சென்றனா்.

பேரணியில் கருப்புக் கொடி ஏந்தியும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினா். ஊா்வலத்தின் போது போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT