தேனி

கம்பம் வந்த ஆட்சியரிடம் பொது மக்கள் சரமாரி புகார்

DIN

தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெறும் கரோனா தடுப்பு பணிகளை வியாழக்கிழமை பார்வையிட வந்த ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் விடம் பொதுமக்கள் சரமாரி புகார்கள் கூறினர்.

தேனி மாவட்டம் கம்பம் நகர் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இங்கு நடைபெறும் கரோனா தடுப்பு பணிகளை வியாழக்கிழமை மாவட்ட ஆட்சியர் ம.பல்லவி பல்தேவ் ஆய்வு செய்தார்.

 புதுப்பள்ளி வாசல் தெருவில் காய்ச்சல் கண்டறியும் முகாம் நடைபெற்றது. 

இதை பார்வை யிட்ட மாவட்ட ஆட்சியாயரிடம் பொதுமக்கள் கூறும் போது குழந்தைகளுக்கு  போட வேண்டிய தடுப்பூசிகள் கடந்த 5 மாத காலமாக கம்பம் அரசு மருத்துவ மனை, நகராட்சி மருத்துவமனைகளில் போடவில்லை என்றனர்.

மேலும் சேனை ஓடை, கம்பம் மெட்டு காலனி, தாத்தப்பன்குளம் பகுதிகளில் சாக்கடை கழிவுகளை அகற்ற ேண்டும் என்றனர்.  மாவட்ட ஆட்சியர் உடமையாக நடவடிக்க எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 

ஆட்சியாரிடம் பொதுமக்கள் புகார் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் மீண்டும் 173 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்!

பூப்பூத்ததை யார் பார்த்தது?

அதிரடி... அதிதி ராவ் ஹைதரி...

ஐபிஎல் தொடரில் முதல் வீரர்... எம்.எஸ்.தோனியின் புதிய சாதனை!

காதலரைப் பிரிந்தாரா ஸ்ருதி ஹாசன்?

SCROLL FOR NEXT