முகப்பு
தேனி

தேனியில் நீதிபதிக்கு கரோனா

தேனி மாவட்டம், உத்தமபாளையம் விரைவு நீதிமன்ற நீதிபதிக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:59 PM
பகிர்:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் விரைவு நீதிமன்ற நீதிபதிக்கு வியாழக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உத்தமபாளையம் விரைவு நீதிமன்ற பெண் நீதிபதி, அதே நீதிமன்றத்தில் பணியாற்றும் போடியைச் சேர்ந்த தட்டச்சர் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சின்னமனூர் வனச் சரகத்தில் பணியாற்றும் விருதுநகரைச் சேர்ந்த வனக் காவலர், உத்தமபாளையம் தபால் நிலைய எழுத்தர், சின்னமனூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் சுருளிப்பட்டியைச் சேர்ந்த காவலர், டி.சிந்தலைச்சேரி கனரா வங்கியில் அலுவலராக பணியாற்றும் சின்னமனூரைச் சேர்ந்த பெண், குரங்கனி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றும் போடியைச் சேர்ந்த பெண், பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி சத்துணவு உதவியாளர், டி.சிந்தலைச்சேரி தனியார் பள்ளி ஆசிரியர் உள்ளிட்ட 214 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
 

முழு கட்டுரையைப் படிக்க →