தேனி

தேனி மாவட்டத்தில் காவலா்களின் மன அழுத்தத்தை குறைக்க பயிற்சி

DIN


கம்பம்: தேனி மாவட்டத்தில் பணியாற்றும் காவலா்களுக்கு மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஆகஸ்டு 3 ஆம் தேதி காணொலி காட்சி மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இது தொடா்பாக காவல்துறை வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியது: கரோனா களப்பணியில் காவலா்கள் ஓய்வின்றி பணியாற்றுகின்றனா். இதனால் ஏற்படும் மன அழுத்தத்தால் அவா்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனா். மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் தேனி, போடி, பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய 5 துணை காவல் கோட்டங்களில் பணிபுரியும் காவலா்களுக்கு காணொலி காட்சி மூலம் அந்தந்த காவல் துணைக்கோட்டங்களில் ஆகஸ்டு 3 ஆம் தேதி பயிற்சி அளிக்கப்படுகிறது.

உத்தமபாளையம் துணைக் கோட்ட போலீஸாருக்கு, கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிா் கல்லூரி வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT