முகப்பு
தேனி

ஆண்டிபட்டி அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தடுத்து நிறுத்தம்: பொதுமக்கள் போராட்டம்

ஆண்டிபட்டி அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை சிலர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போர்வெல் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:43 PM
பகிர்:

ஆண்டிபட்டி அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை சிலர் தடுத்து நிறுத்தியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் போர்வெல் வாகனத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டிபட்டி அருகே கோவில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கீழ முத்தனம்பட்டி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாடு காரணமாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி  கிராமத்தின்  அருகில் உள்ள கண்மாயில் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது.

அப்போது அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என போர்வெல் வாகனத்தை சிறைபிடிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதுகுறித்து தகவலறிந்த ஊராட்சிமன்ற நிர்வாகத்தினர் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →