தேனி

போடி பள்ளியில் காந்தி நினைவு தின கருத்தரங்கம்

DIN

போடி பள்ளியில் காந்தியடிகள் நினைவு தின கருத்தரங்கு நடைபெற்றது.

காந்தியடிகளின் நினைவு தினத்தை பள்ளிகளில் அனுசரிக்க மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனையொட்டி பள்ளிகளில் கருத்தரங்குகள், கவிதைப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. போடியில் அரசு உதவி பெறும் பிச்சாண்டி நடுநிலைப் பள்ளியில் காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு, வாய்மையின் மேன்மை எனும் தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியா் ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். வட்டார வள மைய பயிற்றுனா் உமாகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். இதில் பள்ளி மாணவா்கள் கட்டுரை, கவிதை, பேச்சு போட்டிகளில் பங்கேற்றனா். வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு சான்றுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT