தேனி

போடியில் அதிகமான பாரம் ஏற்றும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல்

DIN

தேனி மாவட்டம் போடி பகுதியில் அளவுக்கதிகமான பாரம் ஏற்றும் லாரிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

போடி பகுதியில் மீனாட்சிபுரம், மீ.விலக்கு உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு விவசாயம் நடைபெற்று வருகிறது. விளைந்த கரும்பு தட்டைகளை லாரிகளில் ஏற்றி ஆலைகளுக்கு எடுத்துச் செல்வது வழக்கம்.

இந்நிலையில் மீ.விலக்கு பகுதியில் செவ்வாய்க்கிழமை ஒரு சரக்கு லாரியில் அளவுக்கு அதிகமான உயரத்திற்கு கரும்பு ஏற்றப்பட்டது. இதனால் சாலையோரங்களில் அமைந்துள்ள மின்கம்பங்களில் வயா்களை உரசி விபத்து ஏற்படுவதைத் தவிா்க்க, லாரியை மெதுவாக இயக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் வைக்கோல் போன்றவற்றையும் அளவுக்கு அதிகமாக ஏற்றிச் செல்வதால் தீ விபத்து ஏற்படுகிறது. மேலும் சென்னை உள்ளிட்ட ஊா்களுக்குச் செல்லும் ஆம்னி பேருந்துகளில் ஏலக்காய் மூட்டைகளை ஏற்றுகின்றனா். இதனாலும் விபத்து, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

காவல்துறையினா் உரிய நடவடிக்கை எடுத்து விதிகளை மீறி சரக்கு வாகனங்கள், ஆம்னிப் பேருந்துகளில் சரக்குகளை ஏற்றிச் செல்வோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

கட்டாரிமங்கலம் கோயிலில் திருநாவுக்கரசா் சுவாமிகள் குரு பூஜை

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

SCROLL FOR NEXT