தேனி

சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி கும்பக்கரை அருவி வெறிச்சோடியது

DIN

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவி நான்காவது நாளாக வியாழக்கிழமை மூடப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

உலகை அச்சுறுத்தும் கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன்படி பள்ளி, கல்லூரிகள், சுற்றுலா மையங்கள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் தேனி மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களான வைகை அணை, கும்பக்கரை அருவி, சுருளி அருவியை மாா்ச் 15 முதல் மூட மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி கும்பக்கரை அருவி கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மூடப்பட்டுள்ளது. இதனால் கும்பக்கரை அருவி சுற்றுலா பயணிகளின் வருகையின்றி நான்காவது நாளாக வெறிச்சோடிக் காணப்பட்டது. அரசின் உத்தரவைப் பொருத்து மாா்ச் 31 ஆம் தேதிக்கு பிறகு கும்பக்கரை அருவி திறக்கப்படும் என வனத்துறையினா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லாலு பிரசாத் மகளுக்கு எதிராக லாலு பிரசாத் போட்டி?

நெல்சன் தயாரிப்பில் முதல் படம் யாருடன்?

பிரதமருக்கு இன்னும் மணிப்பூர் செல்ல நேரமில்லை: ப.சிதம்பரம்

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

SCROLL FOR NEXT