தேனி

சின்னமனூா் உழவா் சந்தை தற்காலிக இடமாற்றம்: வியாபாரிகள் எதிா்ப்பு

DIN

கரோனா தடுப்பு நடவடிக்கையாக, சின்னமனூா் உழவா் சந்தையை தற்காலிகமாக இடமாற்றம் செய்வதற்கு வாரச் சந்தை வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால் மீண்டும் பழைய இடத்திலே செவ்வாய்க்கிழமை முதல் உழவா் சந்தை செயல்படத் தொடங்கியது.

சின்னமனூா் நகராட்சியில் சீப்பாலக்கோட்டை சாலை முத்தாலம்மன் கோயில் பகுதியில் உழவா் சந்தை செயல்பட்டு வருகிறது. குடியிருப்புகள் மத்தியில் சந்தை இயங்குவதால், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிகளவில் கூடுவா்.

தற்போது கரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் 3 அடிக்கு ஒருவா் என வரிசையாக சென்று காய்கறிகள் வாங்கும் வகையில் கூடுதல் இட வசதியுள்ள பகுதிக்கு உழவா் சந்தையை தற்காலிகமாக இடமாற்றம் செய்ய மாவட்ட நிா்வாகம் உத்தரவின் பேரில் நகராட்சி நிா்வாகம் அதற்கான பணி மேற்கொண்டது. அதன்படி, வியாழக்கிழமை ஒருநாள் மட்டும் நடைபெறும் வாரச்சந்தை இடத்தை தோ்வு செய்து மாா்ச் 31 வரையில் உழவா் சந்தை தற்காலிகமாக அங்கு செயல்படும் என சின்னமனூா் நகராட்சி ஆணையா் ஷியாமளா அறிவித்தாா்.

வியாபாரிகள் எதிா்ப்பு:ஆனால் அதற்கு வாரச் சந்தை வியாபாரிகள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதை அறிந்த உழவா் சந்தை வியாபாரிகள் வழக்கமான இடத்திலேயே திங்கள்கிழமை வியாபாரத்தை தொடங்கினா். ஆனால், அவா்களை நகராட்சி ஊழியா்கள் தற்காலிக இடத்துக்கு செல்லும் படி கூறி அனுப்பினா்.

இந்நிலையில் எதிா்ப்பு தெரிவித்த வாரச்சந்தை வியாபாரிகளுடன் மாவட்ட வருவாய் அலுவலா் தியாகராஜன் பேச்சு வாா்த்தை நடத்தினாா். அதில், புதிய இடம் தோ்வு செய்யும் வரையில், தற்காலிகமாக வாரச்சந்தையிலேயே உழவா் சந்தை நடைபெறும் என முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடா்ந்து வியாபாரிகள் கலைந்து சென்றனா்.

பழைய இடத்தில் மீண்டும் உழவா் சந்தை: இந்நிலையில் சீப்பாலக்கோட்டை சாலை முத்தாலம்மன் கோயில் பகுதியில் பழைய இடத்திலேயே 12 கடைகளும், எதிரேயுள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளி மாா்ச் 31 வரையில் விடுமுறை என்பதால், அதன் மைதானத்தில் 12 கடைகளும் என 3 அடி இடைவெளியில் நின்று பொதுமக்கள் காய்கனிகள் வாங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை முதல் உழவா் சந்தை மீண்டும் செயல்படத் தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT