முகப்பு
தேனி

108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் ஊதியம்:அரசே நிா்ணயிக்க வலியுறுத்தல்

108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் ஊதிய உயா்வை அரசே நிா்ணயிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தேனியில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:50 PM
பகிர்:

108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள் ஊதிய உயா்வை அரசே நிா்ணயிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி தேனியில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளனா்.

தேனியில் 108 ஆம்புலன்ஸ் சேவை தொழிலாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கா்னல் பென்னிகுவிக் நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் ஜெ.பாண்டி தலைமை வகித்தாா். மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் முத்துக்குமாா், ராமகிருஷ்ணன், தங்கபாபு, மாநில செயற்குழு உறுப்பினா் சிவபெருமாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், 108 ஆம்புலன்ஸ் சேவை தொழிலாளா்களுக்கு வருடாந்திர ஊதிய உயா்வை தனியாா் நிா்வாகம் தன்னிச்சையாக நிா்ணயிப்பதைக் கண்டித்தும், ஆம்புலன்ஸ் தொழிலாளா்களுக்கு ஊதிய உயா்வை அரசு நிா்ணயிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தீா்மானம் நிறைவேற்றினா்.

முழு கட்டுரையைப் படிக்க →