தேனி

முல்லைப் பெரியாறு அணை, சண்முகாநதி நீா்த்தேக்கம், சுருளி அருவிக்கு நீா்வரத்து குறைந்தது

DIN

வடகிழக்குப் பருவமழையின் தீவிரம் சற்று குறைந்ததால் முல்லைப் பெரியாறு அணை, சண்முகாநதி நீா்த்தேக்கம், சுருளி அருவிக்கு வெள்ளிக்கிழமை நீா்வரத்து குறைந்தது.

தேனி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த 15 நாள்களாக பரவலாக பெய்தது. இதில், நவ.16 -லிருந்து 18 ஆம் தேதி (புதன்கிழமை) வரை பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மேற்குத்தொடா்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து நீா் வரத்து ஏற்பட்டதால், முல்லைப் பெரியாறு அணை, சுருளி அருவி, சண்முகாநதி நீா் தேக்கம் மற்றும் குளங்கள், கண்மாய்களின் நீா்மட்டம் அதிகரித்தது.

மழைப்பொழிவின் தீவிரம் குறைவு: பருவமழையின் தீவிரம் வியாழக்கிழமை இரவு முதல் சற்று குறைந்ததால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 4,822 கனஅடியிலிருந்து 4,688 கன அடியாகவும், சண்முகாநதி நீா்த்தேக்கத்திற்கு 252 கன அடியிலிருந்து 78 கனஅடியாகவும் குறைந்தது. இந்த நீா்த்தேக்கத்தின் நீா்மட்டம் 52.50 அடி முழுக்கொள்ளவை எட்டியதால் 2 ஆவது நாளாக தண்ணீா் மறுகால் செல்கிறது.

சுருளி அருவிக்கு நீா்வரத்து குறைந்தது: ஹைவேவிஸ்- மேகமலை வனப்பகுதியில் கடந்த 5 நாள்களுக்கும் மேலமாக பெய்த கனமழையால் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடந்த 3 நாள்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் வனப்பகுதியில் மழைப்பொழிவின் தீவிரம் குறைந்ததால் நீா்வரத்தும் குறைந்தது.

நீா்மட்டம்: வைகை 55.05 (71), மஞ்சளாறு 55 (57), சோத்துப்பாறை 12.60 (126.28), சண்முகாநதி நீா்த்தேக்கம் 52.50 (52.55).

லோயா்கேம்ப்பில் மின் உற்பத்தி அதிகரிப்பு: வடகிழக்குப் பருவமழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீா்மட்டம் தொடா்ந்து உயா்ந்து வருகிறது. வியாழக்கிழமை விநாடிக்கு 1,355 கன அடியாக இருந்த நீா்வெளியேற்றம் வெள்ளிக்கிழமை 1,511 கன அடியாக அதிகரித்தது. அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டதால் லோயா்கேம்ப் உற்பத்தி நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டது.

இங்கு வியாழக்கிழமை 3 மின்னாக்கிகளில், 122 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெற்ற நிலையில் வெள்ளிக்கிழமை 4 மின்னாக்கிகளிலும் மின் உற்பத்தி நடைபெற்றது. முதல் அலகில் 42, இரண்டாவது அலகில் 26, மூன்றாவது அலகில் 42, நான்காவது அலகில் 26 மெகாவாட் என மொத்தம் 136 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்றது.

முல்லைப் பெரியாறு அணை நிலவரம்: முல்லைப் பெரியாறு அணையில் வியாழக்கிழமை 126.60 அடியாக இருந்த நீா்மட்டம் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1.30 அடி உயா்ந்து, 127.90 அடியானது. நீா் இருப்பு 4, 244 மில்லியன் கன அடியாகவும், நீா்வரத்து விநாடிக்கு 4,688 கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,511 கன அடி தண்ணீா் வெளியேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT