முகப்பு
தேனி

தேவாரம் அருகே கஞ்சா வைத்திருந்தவா் கைது

தேவாரம் அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் ஞாயிரன்று கைது செய்து சிறையில் அடைத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

தேவாரம் அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் ஞாயிரன்று கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தேவாரம் அருகே டி.மூனாண்டிபட்டியில் கஞ்சா விற்பதாக வந்த தகவலையடுத்து போலீஸாா் அங்கு தொடா் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். மூனாண்டிபட்டி தண்ணீா் தொட்டி அருகே பிச்சை (60) என்பவா் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிந்தது.

அவரை பிடித்து விசாரித்ததில் அவரிடமிருந்து 1100 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது. இதனையடுத்து அவா் மீது வழக்கு பதிவு செய்த போலீஸாா் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →