முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைவு
முல்லை பெரியாறு அணையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
தேனிமுல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைவு
முல்லை பெரியாறு அணையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
முல்லை பெரியாறு அணையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைந்தது.
தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களில் நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக மழை பெய்ததால் அதிகமான நீர் வரத்து வந்தது.
தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதியல் மழைப் பொழிவு இல்லை. இதனால் அணைக்கு நீர்வரத்து வருவது குறைந்தது.
நவ.28ல் விநாடிக்கு 786 கனஅடியாக வந்த நீர் நவ. 29 ல் விநாடிக்கு 553 கனஅடியாக இருந்தது. நவ. 30-ல் ( திங்கள்கிழமை நிலவரப்படி) விநாடிக்கு, 521 கனஅடி தண்ணீர் வந்தது.
திங்கள்கிழமை அணையின் நிலவரம்
நீர்மட்டம் 126 அணியாகவும், அணையில் நீர் இருப்பு 3,834 மில்லியன் கனஅடியாகவும், அணைக்குள் நீர்வரத்து வினாடிக்கு 521 கனஅடியாகவும், அணையில் இருந்து நீர் வெளியேற்றம் 1,522 கன அடியாக இருந்தது.
இரச்சல் பாலத்தில் நீர்வரத்து இல்லை
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் போர் பை டேம் என்ற பகுதியில் தேங்குகிறது.
இங்கிருந்து 4 ராட்சத குழாய்கள் மூலம் லோயர் கேம்ப்பில் உள்ள மின்சார நிலையத்திற்கு செல்லும். மின் உற்பத்தி நடைபெற்ற பின்பு முல்லைப்பெரியாறு வழியாக தேனி மாவட்ட பகுதிக்கு செல்லும். அதே நேரத்தில் போர் பை டேம் அருகே வனப்பகுதி வழியாக கசிவு நீர் இரச்சல் பாலம் வழியாக நேரடியாக முல்லைப் பெரியாற்றில் சேரும்.
தற்பொழுது அணைக்கு தண்ணீர் வரத்து குறைந்து வருவதால் இரச்சல் பால ஆற்றிலும் தண்ணீர் வரத்து இல்லை.
மின் உற்பத்தி
முல்லைப்பெரியாறில் இருந்து வரும் தண்ணீர் மூலம் லோயர் கேம்பில் மின்சார உற்பத்தி நடைபெறுகிறது. நான்கு மின்னாக்கிகளில் மின்சார உற்பத்தி தற்போது நடைபெறுகிறது. முதல் அலகில், 42 மெகாவாட், இரண்டாவது அலகில், 26 மூன்றாவது அலகில், 42 நான்காவது அலகில் 26 மெகாவாட் என மொத்தம் 136 மெகாவாட் மின்சார உற்பத்தி நடைபெறுகிறது.