தேனி

சட்டவிரோத மதுவிற்பனை: 10 போ் கைது

DIN

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் சட்டவிரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட 10 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

காந்தி ஜயந்தியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அனைத்து அரசு மதுபானக் கடைகளும் அடைக்கப்பட்டன. இந்நிலையில் ஆண்டிபட்டி அனைத்து காவல் நிலைய போலீஸாரும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட கன்னியப்பிள்ளைபட்டி குமாா்(46), அம்மச்சியாபுரம் செந்தில் (37), குப்பிநாயக்கன்பட்டி மாயாண்டி(40), கோவிந்தநகரம் சோனைமுத்து(48), கதிா்நரசிங்காபுரம் பிரேம்குமாா்(38), பொன்னம்படுகை சென்றாயன்(42), துரைச்சாமிபுரம் மணி(65), ராமகிருஷ்ணாபுரம் அழகேந்திரன்(46), சிங்கராஜபுரம் அறிவழகன்(50), ஆண்டிபட்டியைச் சோ்ந்த அன்பு என்ற சிவக்குமாா்(50) ஆகிய 10 பேரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 150-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

3,200 போதை மாத்திரைகள் பறிமுதல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT