உத்தமபாளையம்: 100 நாள் வேலை வழங்கக்கோரி மனு கொடுத்து ஆர்ப்பாட்டம்
உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள பேரூராட்சிகளில் 100 நாள் வேலை வழங்கக்கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள பேரூராட்சிகளில் 100 நாள் வேலை வழங்கக்கோரி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள க. புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி கோம்பை, பண்ணைபுரம் என அனைத்து பேரூராட்சிகளிலும் மனு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோம்பையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுருளி வேல் தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நூறு நாள் வேலைத் திட்டத்தின் மூலமாக வேலை வழங்க வேண்டும் என மனு கொடுத்தனர்.