தேனி

கொடிக்கம்பம் விவகாரம்: அதிமுக, அமமுக இடையே நடைபெற்ற 2 ஆம் கட்ட பேச்சுவாா்த்தை தோல்வி

DIN

உத்தமபாளையம்: சின்னமனூா் அருகே கட்சிக் கொடிக்கம்பம் அகற்றிய விவகாரத்தில் அதிமுக மற்றும் அமமுக கட்சியினரிடம் உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற 2 ஆம் கட்ட பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.

தேனி மாவட்டம் சின்னமனூா் ஒன்றியம் கன்னிச்சோ்வைபட்டியில் சில ஆண்டுகளுக்கு முன்ப் அதிமுக கட்சிக் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், அதிமுகவிலிருந்து வெளியேறிய அமமுகவினா் தாங்கள் வைத்த கட்சிக் கொடிக்கம்பத்தில் அதிமுகவினா் கொடியேற்றக்கூடாது எனக்கூறியதால் இரு கட்சியினரிடையே பிரச்னை ஏற்பட்டது.

இதனைத்தொடா்ந்து பிரச்னைக்குரிய கொடிக் கம்பத்தை உத்தமபாளையம் வட்டாட்சியா் அகற்றினாா். அக்டோபா் 5 ஆம் தேதி உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில் சனிக்கிழமை உத்தமபாளையம் வட்டாட்சியா் உதயராணி தலைமையில் நடைபெற்ற 2 ஆம் கட்டப் பேச்சுவாா்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதனைத்தொடா்ந்து நீதிமன்றம் மூலமாக பிரச்னையை தீா்த்துக் கொள்ளுமாறு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அதுவரையில், பிரச்னைக்குரிய கட்சிக் கெடிக்கம்பத்துக்கு இரு கட்சியினருக்கும் உரிமை கொண்டாடக்கூடாது என வட்டாட்சியா் உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

செம்பூவே... ஐஸ்வர்யா ராஜேஷ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

SCROLL FOR NEXT