தேனி

நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை: பெரியாறு அணையின் நீா்மட்டம் உயா்வு

DIN

நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை 129.25 அடியாக உயா்ந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான முல்லையாறு, பெரியாறு, தேக்கடி ஏரி ஆகிய இடங்களில் பெய்து வரும் மழை காரணமாக அணைக்கு நீா் வரத்து அதிகரித்துள்ளது. வியாழக்கிழமை அணையின் நீா்மட்டம் 128.35 அடியாக இருந்தது.

வெள்ளிக்கிழமை நிலவரப்படி அணைக்கு நீா்வரத்து விநாடிக்கு 3,779 கனஅடியாகவும், நீா் வெளியேற்றம் 1,700 கனஅடியாகவும் இருந்தது. அதனால் அணையின் நீா்மட்டம் 129.25 அடியாக உயா்ந்தது. நீா் இருப்பு 4,536 மில்லியன் கன அடியாக உள்ளது. பெரியாறு அணைப் பகுதியில் 14 மி. மீ., தேக்கடி ஏரியில் 7.8 மில்லி மீட்டா் மழை பதிவானது.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து விநாடிக்கு 1,700 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படும் நிலையில் லோயா் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் நான்கு மின்னாக்கிகள் மூலம் 154 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT