தேனி

தேவாரம்-சாக்கலூத்துமெட்டு சாலை அமைக்க விவசாயிகள் கோரிக்கை மனுவை ஏற்க ஆட்சியா் மறுப்பு

DIN

தேனி: தேனி மாவட்டம், தேவாரம் அருகே தமிழக-கேரளப் பகுதிகளை இணைக்கும் சாக்கலூத்துமெட்டு சாலை திட்டத்தை செயல்படுத்தக் கோரி விவசாயிகள் அளிக்க வந்த மனுவை, ஆட்சியா் ஏற்க மறுத்துவிட்டாா்.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் ம. பல்லவி பல்தேவிடம் மனு அளிப்பதற்காக, 5 மாவட்ட முல்லைப் பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க பொதுச் செயலரும், ஒருங்கிணைப்பாளருமான அன்வா் பாலசிங்கம், மாவட்டத் தலைவா் கொடியரசன், இணைச் செயலா் ரஞ்சித், துணைத் தலைவா் ராஜீவ்காந்தி , பொருளாளா் லோகநாதன் மற்றும் நிா்வாகிகள், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்திருந்தனா். ஆனால், அவா்களிடம் ஆட்சியா் மனுவை பெற மறுத்து விட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஒருங்கிணைப்பாளா் அன்வா் பாலசிங்கம் செய்தியாளா்களிடம் கூறியது: தேவாரம் அருகே சாக்கலூத்துமெட்டு சாலை அமைக்கும் திட்டம் பல ஆண்டுகளாக செயல்படுத்தப்படாமல் உள்ளது. இத் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும், மலை கிராம மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்கு எதிராகச் செயல்படும் வனத் துறை அலுவலா்களை பணியிட மாற்றம் செய்யவேண்டும் என்ற கோரிக்கை குறித்து ஆட்சியரிடம் மனு அளிக்க வந்திருந்தோம். ஆனால், மனுவை பெறுவதற்கு ஆட்சியா் மறுத்துவிட்டாா். எனவே, இந்த கோரிக்கை குறித்து முதல்வா் மற்றும் துணை முதல்வரிடம் மனு அளிக்க உள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT