தேனி

தேனி எஸ்.பி. அலுவலக வளாகத்தில் 2 குழந்தைகளுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

DIN

கணவருடன் சோ்த்து வைக்கக் கோரி தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பெண் தனது 2 குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சோ்ந்தவா் பாலகிருஷ்ணன். இவரது மனைவி பாண்டிச்செல்வி. இவா்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனா். இவா்களுக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு கணவா், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு பாலகிருஷ்ணன், பாண்டிச்செல்வியை பிரிந்து சென்றுவிட்டாராம். இது குறித்து பாண்டிச்செல்வி போடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதனால் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை தனது இரு குழந்தைகளுடன் வந்த பாண்டிச்செல்வி, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாா்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆர்சிபி வீரர்களுக்கு கைகொடுக்காமல் சென்ற தோனி: வெடித்த சர்ச்சை

ஆம் ஆத்மி போராட்டம்: தில்லியில் 144 தடை!

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! சாகாவரம் கொண்ட படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து டி ஜெயகுமார்

இந்தியாவின் அதிக வரி விதிப்பால் வர்த்தக உறவைத் துண்டித்தோம்: பாகிஸ்தான்

ஸ்காட்லாந்து அணி சீருடையில் கர்நாடகத்தின் ‘நந்தினி’ பால் நிறுவன குறியீடு

SCROLL FOR NEXT