தமிழக- கேரள எல்லையான குமுளி பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற ஹெலிகாப்டா் சோதனை ஓட்டம். 
தேனி

தமிழக- கேரள எல்லையில் ஹெலிகாப்டா் சோதனை ஓட்டம்

சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், தமிழக- கேரள எல்லையான குமுளியில் ஹெலிகாப்டா் சேவைக்கான சோதனை ஓட்டம் புதன்கிழமை நடந்தது.

DIN

கம்பம்: சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், தமிழக- கேரள எல்லையான குமுளியில் ஹெலிகாப்டா் சேவைக்கான சோதனை ஓட்டம் புதன்கிழமை நடந்தது.

குமுளி அருகே உள்ள பத்துமுறி பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஹெலிகாப்டா் போக்குவரத்து சேவை தொடக்க விழா ஊராட்சித் தலைவா் ஷீபா தலைமையில் நடந்தது. தொடா்ந்து இதற்கான சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இதில் 5 போ் பயணிக்கலாம் என்றும், இங்கிருந்து மூணாறு, கொச்சி, திருவனந்தபுரம், கோட்டயம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கும் சென்று திரும்பலாம் என்றும் அந்த நிறுவனத்தினா் தெரிவித்தனா்.

பொதுமுடக்கத்தில் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு கேரளத்தில் சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்டு வரும் நிலையில் ஹெலிகாப்டா் சேவை தொடங்கப்பட்டிருப்பது சுற்றுலா பயணிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமக்குள் பிளவை அனுமதிக்காதீர்: முதல்வர் ஸ்டாலின்

ஜன நாயகனுக்காக காத்திருந்தேன்! பராசக்திக்கு வாழ்த்துகள்! அண்ணாமலை பேட்டி! | BJP

”விஜய்க்கு நெருக்கடி கொடுக்கிறோமா?” பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பதில் | TVK | BJP

திருவனந்தபுரம்: திருமண நாளிலேயே சாலை விபத்தில் இளைஞர் பலி

வெளிநாட்டு மாணவர்களுக்கும் இலவச கல்வி அளிக்கும் ஜெர்மனி பல்கலை.கள்!

SCROLL FOR NEXT