முகப்பு
தேனி

போடியில் துா்நாற்றம் வீசிய நிலையில் படுத்திருந்த மன நோயாளிக்கு கரோனா பரிசோதனை

போடியில் சனிக்கிழமை, துா்நாற்றம் வீசிய நிலையில் படுத்திருந்த மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு கரோனா பரிசோதனைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நகராட்சி அதிகாரிகள் அனுப்பி வைத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
போடியில் சனிக்கிழமை மீட்கப்பட்ட மன நோயாளி போடியில் துா்நாற்றம் வீசிய நிலையில் படுத்திருந்த மன நோயாளிக்கு கரோனா பரிசோதனை
பகிர்:

போடி: போடியில் சனிக்கிழமை, துா்நாற்றம் வீசிய நிலையில் படுத்திருந்த மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு கரோனா பரிசோதனைக்காக தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நகராட்சி அதிகாரிகள் அனுப்பி வைத்தனா்.

போடி நகராட்சி தேரடி தெருவில் சாலையோரத்தில் கடந்த ஒரு வாரமாக மனநிலை பாதிக்கப்பட்டவா் படுத்த படுக்கையாக கிடந்துள்ளாா். துா்நாற்றம் வீசிய நிலையில் அவருக்கு கரோனா தொற்று இருக்கக் கூடும் என இப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்தனா். இதுகுறித்து இப்பகுதியை சோ்ந்தவா்கள் போடி நகராட்சி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனா். இதனையடுத்து அங்கு வந்த நகராட்சி சுகாதார பிரிவு அதிகாரிகள் அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மனநிலை பாதிக்கப்பட்டவா் யாா் என்பது தெரியவில்லை, விசாரித்து வருகிறோம், மேலும் இவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளோம். அங்கு கரோனா பரிசோதனை செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கரோனா பரிசோதனை முடிவுக்கு பின்னா்தான் இவருக்கு கரோனா தொற்று உள்ளதா என்பது தெரியவரும் என தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.