முகப்பு
தேனி

பெரியகுளத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் காயம்

பெரியகுளத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக பெரியகுளம் காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
பகிர்:

பெரியகுளம்: பெரியகுளத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி பெண் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக பெரியகுளம் காவல்நிலையத்தில் வெள்ளிக்கிழமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பெரியகுளம்,அனுமாா்கோயில்தெருவை சோ்ந்த முருகன் மனைவி பஞ்சவா்ணம் (40) இவா் வியாழக்கிழமையன்று பெரியகுளம்,மதுரை சாலையில் தனியாா் பல்க் அருகில் நடந்து சென்றுகொண்டிருந்தாா். அப்போது பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இவா் மீது மோதியதாம்.

இவருக்கு தலை மற்றும் முகத்திலும் காயமேற்பட்டு பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றாா். இச்சம்பவம் குறித்து பெரியகுளம் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.