முகப்பு
தேனி

சின்னசுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை

ஆண்டிபட்டி அருகே மேகமலை வனப்பகுதியில் தொடர்மழை காரணமாக  சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:17 PM
அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் வெள்ளம்
பகிர்:

ஆண்டிபட்டி அருகே மேகமலை வனப்பகுதியில் தொடர்மழை காரணமாக  சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கடமலைக்குண்டு அருகே கோம்பைத்தொழு பகுதியில்  சின்ன சுருளி அருவி அமைந்துள்ளது. வனச்சரகத்திற்குட்பட்ட இந்த அருவிக்கு கேரளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கரோனா தடுப்பு நடவடிக்கையாக  இந்த அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்திருந்தனர். மேலும் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாத காரணத்தால் அருவியானது நீர்வரத்தின்றி வறண்டு காணப்பட்டது. 

இந்நிலையில் மேகமலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக  சின்னசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. மேலும் தொடர் கனமழை காரணமாக செவ்வாய்க்கிழமை சின்ன சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அருவிக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேலும் அருவிப் பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கட்டுப்பாடுகளை மீறி  அருவியில் குளிக்கச் செல்லும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →