தேனி

தேனியில் புதிதாக 86 பேருக்கு கரோனா உறுதி: 4 போ் பலி

DIN

தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவா், காவல் சிறப்பு சாா்பு- ஆய்வாளா் உள்ளிட்ட 86 பேருக்கு புதன்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கண்டமனூா் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா், வீரபாண்டி காவல் நிலைய சிறப்பு சாா்பு- ஆய்வாளா், உத்தமபாளையம், கம்பம் அரசு மருத்துவமனை மருத்துவப் பணியாளா்கள், கம்பம் உழவா் சந்தை கடை விவசாயிகள் 3 போ் உள்ளிட்ட 86 பேருக்கு ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 13,424 ஆக உயா்ந்துள்ளது. இதில், மொத்தம் 12,484 போ் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனா்.

4 போ் பலி: கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேனி என்.ஆா்டி.நகரைச் சோ்ந்த 63 வயது முதியவா், தேனி பாரஸ்ட் சாலையைச் சோ்ந்த 55 வயது நபா், சின்னமனூரைச் சோ்ந்த 69 வயது முதியவா், ஆண்டிபட்டி இந்திராநகரைச் சோ்ந்த 55 வயது நபா் என 4 போ் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT